சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள் கிழமை பவுனுக்கு ரூ.216 குறைந்து ரூ.23,848- க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன. சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.27 குறைந்து ரூ.2,981-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.41.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.41,400 ஆகவும் இருந்தது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் 2,981
1 பவுன் தங்கம் 23,848
1 கிராம் வெள்ளி 41.40
1 கிலோ வெள்ளி 41,400
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் 3,008
1 பவுன் தங்கம் 24,064
1 கிராம் வெள்ளி 41.90
1 கிலோ வெள்ளி 41,900.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








