/

அனைத்து துறைகளிலும் ஊழல்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image
Updated On :8 அக்டோபர் 2018, 2:13 pm IST

பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. ஊழல் குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம். ஊழல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

பொது நிகழ்ச்சியில் பல்கலைக் கழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஆளுநர் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. 

இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரியதில் அதிமுகவுக்கு தோல்வி பயம் இருப்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.