மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

அ.தி.மு.க.வில் வாரிசு இல்லை; தொண்டர்களே அதன் வாரிசு: முதல்வர் பழனிசாமி பேச்சு

அ.தி.மு.க.வில் வாரிசு இல்லை; தொண்டர்களே அதன் வாரிசு என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :21 அக்டோபர் 2018, 8:40 am

சேலம்:   அ.தி.மு.க.வில் வாரிசு இல்லை; தொண்டர்களே அதன் வாரிசு என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க.வின் 47ம் ஆண்டு தொடக்க விழா சேலம் அருகேயுள்ள பூலாவரி என்ற இடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தொண்டர்கள் இருக்கும் இயக்கமே எப்போதும் வலிமையான இயக்கம்.  அ.தி.மு.க.வில் வாரிசு என்பதே இல்லை. தொண்டர்களே அதன் வாரிசு.  அ.தி.மு.க. இளைஞர்கள் இருக்கும் ஓர் இயக்கம்.

எதிர்க்கட்சிகள் என்னதான் நம்மை விரட்டினாலும் ஒன்றும் நடக்கப்  போவது இல்லை.  தி.மு.க. ஆள் வைத்து உழைக்கிற கட்சி.  ஆனால் அ.தி.மு.க. எப்போதும் சொந்தமுடன் உழைக்கின்ற கட்சி. தி.மு.க. தலைவராக மறைந்த கருணாநிதி இருந்தபொழுதே அ.தி.மு.க. ஆட்சியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  மக்களை ஏமாற்றும் கட்சிகள் இனி ஆட்சிக்கு வர முடியாது 

இந்திய துணை கண்டத்திலேயே பொதுமக்கள் நலுனுக்காக  அதிக அளவிலான திட்டங்களை கொண்டு வந்தது ஜெயலலிதா அரசுதான். அவர்தான் மாணவ மாணவிகள் பயன்பெற மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை கொண்டு வந்தார். அந்த திட்டத்தில் இதுவரை 36 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு உள்ளது.  இன்னும் 15 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது 

இவ்வாறு அவர் பேசினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.