தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் 24 ஆவது நாளாக திங்கள்கிழமையும் தடை நீடித்தது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் நல்ல மழை பெய்து நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த செப். 29- ஆம் தேதி முதல் கும்பக்கரை அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். கடந்த 20 நாள்களுக்கு மேலாக நல்ல மழை பெய்து வருவதால் அருவிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை 24 ஆவது நாளாக அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
சோத்துப்பாறை அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சோத்துப்பாறை அணையைப் பார்வையிட்டு செல்கின்றனர்.
இது குறித்து தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் சுரேஷ் தெரிவித்தது: கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருதி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சீரான நீர்வரத்து ஏற்படும் வரை அணைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீடிக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?

விதிமீறல்! விஜய் மீது வழக்குப் பதிவு!

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


