கனிஷ்க் கோல்டு நிறுவனத்துக்கு ரூ.820 கோடி கடன் வழங்கும் முன் வங்கி அதிகாரிகள் ஆவணங்களை முறையாக சரிபார்த்தார்களா என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கனிஷ்க் கோல்டு நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடக்கினர். ஆனால், எங்களது வங்கிக்கு கனிஷ்க் கோல்டு நிறுவனம் ரூ.820 கோடி கடன் பாக்கி வைத்துள்ளது. இந்த நிலையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் நடவடிக்கையால் இந்தத் தொகையை வசூலிக்க முடியவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி.ஆர் மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கப் பிரிவு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இதுù தாடர்பாக உரிய அதிகாரி முன் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் முறையிட வேண்டும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.820 கோடி கடன் வழங்கும் முன் வங்கி அதிகாரிகள் ஆவணங்களை முறையாகச் சரிபார்த்தார்களா, எந்தெந்த காலகட்டங்களில் எவ்வளவு தொகை வழங்கப்பட்டது, அதற்கு என்ன உத்தரவாதம் தரப்பட்டது எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நேரிடும் என எச்சரித்த நீதிபதி, இந்த முறைகேட்டில் வங்கி அதிகாரிகளின் தொடர்பு குறித்த விசாரணை அறிக்கையை வரும் 17-ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுகவினரின் வதந்திகளை முறியடித்து கோயில் நிலப் பிரச்னைகளுக்கு தீா்வு: உதயநிதி ஸ்டாலின் உறுதி
நூறு கோடி பேர் பார்த்த காணொலி

எல்.இ.டி. வரலாற்றில் மறக்கக் கூடாத லோசெவ்

பசுமை மனிதர்...
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

