கடலூரில் மரங்களில் அடிக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ எடையிலான ஆணிகளை இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.
கடலூர் நகரின் முக்கிய சாலைகளின் இருபுறமும் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் மீது பல்வேறு நிறுவனங்களின் விளம்பரத் தகடுகள் ஆணிகள் மூலம் அடிக்கப்பட்டிருந்தன. இந்த ஆணிகளை அகற்ற கடலூர் சிறகுகள் அமைப்பினர், கடலூர் புனித வளனார் கல்லூரி மாணவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை சுமார் 50 பேர் 3 குழுக்களாகப் பிரிந்து இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
பழைய ஆட்சியரக சாலை, வணிக வரித் துறை அலுவலக சாலை, கடற்கரைச் சாலை ஆகிய பகுதிகளில் மரங்களில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகளை நெம்புகோல் உதவியுடன் அகற்றினர். சுமார் 75 மரங்களிலிருந்து 5 கிலோ ஆணிகளை அகற்றினர்.
இதுகுறித்து கடலூர் சிறகுகள் அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
நாங்கள் எதிர்பார்த்ததை விட இந்தப் பணி சவாலாக அமைந்தது. சில மரங்களில் பெரிய அளவிலான இரும்புக் கம்பிகள், "யு' வடிவிலான கிளாம்புகள் அடிக்கப்பட்டிருந்தன. இதனால், சில மரங்களின் கிளைகள் பலவீனமடைந்து உடைந்தன. இந்தப் பணியை வரும் நாள்களிலும் தொடர உள்ளோம். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மரங்களில் ஆணி அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள்-திருமூலர்

தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


