தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டமாகக் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் இடி, மேகம் உருவாகக்கூடும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருமயத்தில் 30 மி.மீ.: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அறந்தாங்கி, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தலா 30 மி.மீ. பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர்பஜார், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றார் அவர்.
3 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் திருச்சி, பாளையங்கோட்டை, வேலூரில் 100 டிகிரி வெப்பநிலையும், திருத்தணியில் 98 டிகிரி வெப்பநிலையும் பதிவானது. மற்ற இடங்களில் மிதமான வெப்பநிலை காணப்பட்டது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் தென் மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35-45 கி.மீ. வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கவனமாக இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருகிய மிளகாய் செடிகள்: விவசாயிகள் கவலை

பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம்

ராமேசுவரத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான படகு தீயில் எரிந்து சேதம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

