சென்னையில் காவலர்கள் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் ஒரு மாதத்தில் செயல்பாட்டுக்கு வருகிறது.
இந்தியாவில் அதிகமாக விபத்துகள் நடைபெறும் பெரு நகரங்களில் முதலிடத்தில் இருக்கும் சென்னையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட 7,466 சாலை விபத்துகளில் 1,341 பேர் இறந்தனர். 6 ஆயிரம் பேர் காயமடைந்தனர். 2016-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2017-ஆம் ஆண்டு 158 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் பெருநகரங்களில் நடந்த மொத்த விபத்துகளில் 14.9 சதவீதம் சென்னையில் நடைபெறுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, சாலை விபத்துகளையும், உயிர் இழப்புகளையும் தடுக்கும் வகையில் சென்னை காவல்துறை போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும் போலீஸார் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும்போது பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. அதேபோல போலீஸார் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு வருகின்றன.
ஒரு மாதத்தில் செயல்படும்: இந்நிலையில் போக்குவரத்து போலீஸார் மீது கூறப்படும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், போலீஸாரிடம் தகராறு செய்பவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையிலும் காவலர் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை காவல்துறை முடிவு செய்தது.
இந்த திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளியை சென்னை காவல்துறை இறுதி செய்துள்ளது. இதையடுத்து இத் திட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என சென்னை பெருநகரக் காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிறப்பம்சங்கள்: இத்திட்டம் ரூ.1.50 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக 200 கேமராக்கள் வாங்கப்படுகின்றன. திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர், மேலும் 100 கேமராக்கள் வாங்கப்படவுள்ளன. இந்த கேமரா 8 மணி நேரம் தொடர்ந்து செயல்படும் திறன் கொண்டது. கேமராவில் பதிவாகும் காட்சிகளை 34 ஜிபி அளவுக்கு சேமிக்க முடியும். அதேபோல கேமரா 120 டிகிரி கோணத்துக்கு காட்சிகளை பதிவு செய்யும். இந்த கேமராவில் 1080 ரிசொல்யூசனில்' துல்லியமாகக் காட்சிகள் பதிவாகும்,என்கோடிங் பார்மெட்' என்ற தொழில்நுட்பத்தில் காட்சிகள் கேமராவில் சேமிக்கப்படும்.
கேமராக்கள் முதலில் இணைய இணைப்பு இன்றி வழங்கப்படுகிறது. இந்த கேமராவுக்காக ஒவ்வொரு போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் மினி சர்வர் அமைக்கப்படுகிறது. இந்த மினி சர்வர்கள், வேப்பேரியில் உள்ள போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பிரதான சர்வரில் இணைக்கப்பட்டிருக்கும். பணி முடித்த காவலர்கள், காவல் நிலையத்தில் உள்ள மினி சர்வரில் கேமராவை இணைத்ததும், மினி சர்வர் கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளை பதிவிறக்கம் செய்து, பிரதான சர்வருக்கு இணையம் மூலம் காட்சிகளை அனுப்பும்.
காவலர்களுக்கு வழங்கப்படும் கேமராவில் 4 ஜி 'அலைக்கற்றை இணைய இணைப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக செயல்படத் தொடங்கியதும், காவலர் கேமராவில் இருந்தே இணையம் மூலம் நேரடியாக பிரதான சர்வருக்கு காட்சிகளை அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த காட்சிகளை காவல்துறை அதிகாரிகள் நேரலையாக அலுவலகத்தில் இருந்து பார்க்க முடியும்.
லஞ்ச புகார்களுக்கு முற்றுப்புள்ளி: இது தொடர்பாக அந்த அதிகாரி மேலும் கூறியது:
ஏற்கெனவே இத்திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் சோதனை முறையில் செய்து பார்க்கப்பட்டது. அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் கூறி, அதை நிவர்த்தி செய்துள்ளோம். சென்னையில் போக்குவரத்து போலீஸார் தினமும் 100 இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபடுகின்றனர். அந்த இடங்களில் சீருடையில் கேமரா பொருத்தப்பட்ட போலீஸார் பணியில் ஈடுபடுவார்கள்.
முக்கியமாக விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும் காவலர்கள் சீருடையிலேயே இந்த கேமரா பொருத்தப்படும்.
ஏனெனில், வாகனச் சோதனையில் அபராதம் வசூலிக்கும்போதே போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து பிரச்னை ஏற்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அபராதம் வசூலிக்கும் காவலர்கள் மீது கூறப்படும் லஞ்ச புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், போலீஸாரிடம் தகராறு செய்பவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையிலும் இந்த கேமரா பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
கேமராவை ஆப்' செய்தால் நடவடிக்கை
சென்னையில் காவலர் சீருடையில் பொருத்தும் கேமரா திட்டத்தில், காவலர்கள் தங்களது சீருடையில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவை ஆப்' செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
பணமில்லாமல் அபராதம் வசூலிக்கும் திட்டம் போக்குவரத்து பிரிவு போலீஸார் மீது லஞ்ச புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் காவலர்கள், வாகன ஓட்டிகளிடம் பணமாக அபராதம் வசூலித்தால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இருப்பினும் வாகன ஓட்டிகளிடம் அபராதத்தை பணமாக வசூலித்ததாகவும், லஞ்சம் வாங்கியதாகவும் 5 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சீருடையில் கேமரா பொருத்தப்பட்ட பின்னர், கேமராவை ஆப் செய்துவிட்டு போலீஸார் லஞ்சம் வாங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர் கூறியது:
காவல் நிலையத்தில் இருந்து காவலர் பணிக்கு புறப்படும்போதே சீருடையில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா ஆன் செய்யப்படும். அதன் பின்னர், அந்த கேமராவை அவர் ஆப்' செய்யக் கூடாது. அதையும் மீறி காவலர், தன்னிச்சையாக செயல்பட்டு ஆப்' செய்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அவர், லஞ்சம் வாங்குவதற்கு கேமராவை ஆப்' செய்திருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோதிட அறிவு என்பது என்ன? அதன் மூலம் அறிவது என்னென்ன?
என் உதட்டுல நீ இனிக்கிறியே... அப்படிபோடு நடன விடியோவை பகிர்ந்த த்ரிஷா!

மே மாத எண்கணித பலன்கள் – 9

ஒன்பிளஸ் பாட் 4 அறிமுகம்! அட்டகாசமான அம்சங்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


