தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் நல்லாட்சி தொடர்வதாக மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி (பால்வளத்துறை) ஆகியோர் தலைமையில் அதிமுகவினர், சிவகாசியிலிருந்து விருதுநகர் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணி சென்றனர். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற விழாவில், 100 பயனாளிகளுக்கு ரூ. 75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 17 மாதங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. எதிர்க்கட்சிகளின் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் நல்லாட்சி தொடர்கிறது. தேர்தலை கண்டு அதிமுக எப்போதும் பின் வாங்கியதில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பின்னர், மேட்டூர், அமராவதி, பவானி சாகர் அணை உள்பட பல்வேறு அணைகள் நிரம்பின. மேலும், 32 ஆண்டுகளுக்கு பிறகு உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது சாதனை. இப்படி தமிழக அரசு பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. சிலரின் கண் திருஷ்டியால்தான் முக்கொம்பு அணை உடைந்துள்ளது என்றார்.
விழாவில் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியது: சிலர், அரசின் சாதனைகளை மறைக்க பொய் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காகவே கட்சி தொடங்கியுள்ளனர். தற்போது நடைபெற்று வரும் சைக்கிள் பேரணி மூலம் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கலைக்க நினைத்தவர்களுக்கு இடிவிழுந்து விட்டது என்றார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ. உதயகுமார், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி: விமான நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் பயணி கைது

மேற்கு, மத்திய, தென் மாவட்டங்களுக்கு சிறந்த நாள்! இடியுடன்கூடிய மழை பெய்யும்!

டூரிஸ்ட் ஃபேமலி ஓராண்டு நிறைவு... அபிஷன் ஜீவிந் பகிர்ந்த பதிவு!

தெப்போற்சவம் முதல் கும்பாபிஷேகம் வரை.. எந்த கோயிலில் என்ன விசேஷம்?
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


