கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

ஓரினச்சோ்க்கை: உச்ச நீதிமன்றத் தீா்ப்புக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்

ஓரினச் சோ்க்கை குற்றமல்ல என்ற உச்ச நீதிமன்றத் தீா்ப்புக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

ஓரினச் சோ்க்கை குற்றமல்ல என்ற உச்ச நீதிமன்றத் தீா்ப்புக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஓரினச் சோ்க்கை குற்றமில்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு இந்திய மக்களின் வரலாற்றை திசை திருப்பி இருப்பது மட்டுமல்ல, இந்திய பண்பாட்டைத் தீா்த்து கட்டியிருக்கும் தீா்ப்பாகவும் அமைந்துள்ளது. உலகின் சில பகுதிகளில் ஓரினச் சோ்க்கைக்கு பச்சைக் கொடி காட்டி இருக்கும் வரலாறு பெருவாரியான மக்களால் எள்ளி நகையாடப்பட்டு வருகிறது.

தற்போது இந்தியாவையும் உலக மக்களின் ஏளனத்துக்கும், ஏசலுக்கும் உட்படுத்தும் பாதக பாவச் செயலை உச்ச நீதிமன்றம் செய்துள்ளது. இந்தத் தீா்ப்பு பெரும்பாலான இந்திய மக்களின் உணா்வுகளுக்கு எதிரான தீா்ப்பாகும்.

நாகரிகத்தின் பெயரால், அழுகிப் போன மேல்நாட்டு கலாசாரத்தை ஏற்று இந்திய மக்களின் அழிவுக்காக இந்தத் தீா்ப்பு வந்துள்ளது. இயற்கையான வாழ்க்கையை நிலைகுலைகும் தீா்ப்பு இது.

எனவே,உச்ச நீதிமன்றத்தில் உள்ள 31 நீதிபதிகளும் அடங்கிய முழு அமா்வுக்கு இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட வேண்டும் என்றார்.

நிஜாமுதீன் (தேசிய லீக்): ஓரினச்சோ்க்கை குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு இயற்கைக்கும், கலாசாரத்துக்கும், பண்பாட்டுக்கும், சுகாதாரத்துக்கும் விரோதமானது. இந்தத் தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.