ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

சுற்றுச்சூழலுக்கு உகந்த கரும்புச் சக்கை விநாயகர் சிலை

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது மக்கள் பயன்படுத்துவதற்காக, கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த கரும்புச் சக்கையை மூலப் பொருளாகக் கொண்டு விநாயகர் சிலைகளைத் தயாரித்துள்ளனர்.

News image

மாணவர்கள் தயாரித்துள்ள கரும்புச் சக்கையால் ஆன விநாயகர் சிலைகள்.

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST


விநாயகர் சதுர்த்தி விழாவின்போது மக்கள் பயன்படுத்துவதற்காக, கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த கரும்புச் சக்கையை மூலப் பொருளாகக் கொண்டு விநாயகர் சிலைகளைத் தயாரித்துள்ளனர்.
கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் செயல்பட்டு வரும் ரே' எனும் பெயரிலான புதிய கண்டுபிடிப்புகளுக்கான மாணவர் அமைப்பினர் கரும்புச் சக்கை மூலமாக விநாயகர் சிலைகளைத் தயாரித்துள்ளனர். 
இதுகுறித்து இந்த அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கூறியதாவது:
விநாயகர் சதுர்த்தியின்போது பயன்படுத்தப்படும் சிலைகள் வேதிப் பொருள்களைக் கொண்டு செய்யப்பட்டிருப்பதால் அவை நீரில் கரைக்கப்படும்போது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதுடன் நீரில் உள்ள உயிரினங்களையும் பாதிக்கிறது.
எனவே, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் விநாயகர் சிலைகளைத் தயாரிப்பதில் நாங்கள் ஆர்வம்காட்டி வந்தோம். அதன்படி, கரும்புச் சக்கை மூலமாகப் பல பொருள்கள் தயாரிக்கப்படுவதை அறிந்து, கரும்புச் சக்கையுடன் ஸ்டார்ச் கலந்து சிலைகளைத் தயாரித்துள்ளோம். இவை விரைவில் மக்களைச் சென்றடைய உள்ளன.
இந்தச் சிலைகளை நீரில் கரைக்கும்போது அவை முழுமையாகக் கரைந்து நீரில் உள்ள மீன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவாகவும் மாறும். அத்துடன், நீர் மாசுபடுவதும் தடுக்கப்படும். இந்த ஆண்டு நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்தக் கரும்புச் சக்கை விநாயகரை இடம்பெறச் செய்ய வேண்டும் எனும் ஆவலில் 30 மாணவர்கள் ஓராண்டு உழைத்து வெற்றி பெற்றுள்ளோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.