மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

மேட்டூர் அணை நீர்மட்டம் குறையத் தொடங்கியது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST


மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது. 
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் படிப்படியாகக் குறைந்து வந்தது. 
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 6 ஆயிரம் கனஅடியாகச் சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனம், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 6,800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் வியாழக்கிழமை மாலை அணையின் நீர்மட்டம் 119.98 அடியாகக் குறைந்தது. அணையின் நீர் இருப்பு 93.40 டி.எம்.சி.யாக இருந்தது. 
கடந்த 31-ஆம் தேதி நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. கடந்த 6 நாள்களாக முழுக் கொள்ளளவை (120 அடி) கொண்டிருந்த மேட்டூர் அணை வியாழக்கிழமை மாலை 119.98 அடியாகச் சரிந்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.