செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

அதிமுக அலுவலகத்தில் முதல்வர் -துணை முதல்வர் ஆலோசனை

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Published On :


அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வரும் 30-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் 
ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மாலை 6.30 மணியளவில் வந்தனர்.
அகில இந்தியத் தலைவர்கள்: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. இந்த விழாக்களில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் இறுதி விழாவை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதையொட்டி, சென்னை கடற்கரை சாலையில் நூற்றாண்டு வளைவு திறக்கப்பட இருக்கிறது. மேலும், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் விழாவுக்காக மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாவுக்கு அகில இந்தியத் தலைவர்களை அழைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய அளவில் எந்தெந்த கட்சிகளின் தலைவர்களை அழைப்பது என்பது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கட்சிப் பதவிகள்: அதிமுக அமைப்பு ரீதியாகச் செயல்படும் மாவட்டங்களில் காலியாக உள்ள கட்சிப் பதவியிடங்களை நிரப்புவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.