இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

மாதிரி கிராமம் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை:  தம்பிதுரை

மாதிரிக் கிராமம் திட்டத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாய்கூட நிதி ஒதுக்கவில்லை என்றார் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை. 

Published On :


மாதிரிக் கிராமம் திட்டத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாய்கூட நிதி ஒதுக்கவில்லை என்றார் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை. 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பேரவை தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பேரூராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை மக்களை நேரில் சந்தித்து மனு பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:
ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுவிக்கக் கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் மனு அளித்துள்ளது. இதற்கான இறுதி முடிவை ஆளுநர்தான் எடுக்க வேண்டும். 
திமுக 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது. அந்த உறவைப் புதுப்பிப்பதாகவே அவர்களின் சமீபத்திய நடவடிக்கைகள் அமைந்துள்ளன. திமுக தலைவர் கருணாநிதி உடல் நலமின்றி வீட்டில் இருந்தபோது பிரதமர் மோடி அவரை சந்தித்ததில் இருந்தே அவர்களின் உறவு தொடர்கிறது. 
மத்திய அரசின் மாதிரிக் கிராமம் திட்டத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. இதனால் அந்தத் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. கரூரில் சாயப்பூங்கா திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவர்களைச் சமாதானம் செய்து விரைவில் அந்தத் திட்டத்தைக் கொண்டு வரும் சூழல் ஏற்படுத்தப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.