
சென்னை: அரசியல் கட்சிகளின் கொடிகளை பொது இடங்களில் சட்ட விரோதமாக நடுவதற்கு நிரந்தரமாக தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு 4 வார காலத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஏ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினா் தங்களது கட்சிக் கொடி மரங்களை சாலையோரங்கள், பூங்கா, விளையாட்டு மைதானங்கள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களில் நிரந்தரமாக நடுகின்றனா். மேலும் கட்சியின் கூட்டங்கள் உள்ளிட்ட பிற நிகழ்வுகளுக்கு சாலையின் இரு புறறங்களிலும் ஏராளமான கொடிகளை நடுகின்றறனா். இதனால் சாலைகளின் ஓரங்களில் நவீன இயந்திரங்களைக் கொண்டு குழிகள் தோண்டப்படுகின்றறது. இந்த குழிகளால் தொலைப்பேசி இணைப்புகள் மற்றும் மின் கேபிள்கள் பாதிக்கப்படுவதோடு சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இவ்வாறு தோண்டப்படும் குழிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் எந்தவிதமான அனுமதியும் பெறுவதில்லை.
எனவே பொதுமக்களுக்கு இடையூறறாக உள்ள அரசியல்கட்சிகளின் கொடிகளை நிரந்தரமாக அகற்ற உத்தரவிட வேண்டும். பொது இடங்களில் கட்சிக் கொடிகளை நடுவதற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளா், வருவாய்த்துறைச் செயலாளருக்கு கோரிக்கை மனு அளித்தேன். அந்த கோரிக்கையை இதுவரை பரிசீலிக்கவில்லை. எனவே பொது இடங்களில் கட்சிக் கொடிகளை சட்ட விரோதமாக நடுவதற்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் எம்.வி.முரளிதரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக தமிழக அரசு 4 வார காலத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.