தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று: ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசப் போவதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.


சென்னை: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசப் போவதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பொதுவாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை காணப்படும். தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும். வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாகக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...