டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தேர்தல் பிரசாரம்: பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை!

கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர்

News image
Updated On :9 ஏப்ரல் 2019, 5:24 am

DIN


கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 

17-வது மக்களவைக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், ஏற்கனவே, தமிழகத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி இருவருமே தங்களது முதல்கட்ட பிரசாரத்தை முடித்துள்ளனர். 

இந்நிலையில், அடுத்தக்கட்ட பிரசாரமாக கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கோவை வருகிறார். 

பொதுக்கூட்டத்தில் பங்கேற்ப்பதற்காக பிரதமர் இன்று மாலை 6.30 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வருகிறார். அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வருகிறார்.

மோடியின் பிரசார பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தமாகா தலைவர் வாசன், சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார், கொமுக தலைவர் பெஸ்ட் ராமசாமி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, பாமக நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். 

பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசும் மோடி பிரசாரத்தை முடித்துக்கொண்டு இரவு 8.45 மணியளவில், தனி விமானத்தில் தில்லி திரும்புகிறார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, கோவை விமான நிலையத்தில் இருந்து, கொடிசியா மைதானம் வரை போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

கோவை பிரசாரத்தை தொடர்ந்து தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், துனை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்தை ஆதரித்து வருகின்ற 13 ஆம் தேதி மோடி பிரசாரம் மேற்கொள்கிறார். 12 ஆம் தேதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் கட்சி தேசியத் தலைவா் ராகுல் காந்தி தேனியில் பிரசாரம் செய்கிறார். 

தேசியத் தலைவர்களின் தொடர் வருகையால் தமிழகத்தில் தோ்தல் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.