/

அமைச்சர் மணிகண்டனை பதவியிலிருந்து நீக்கியது முதல்வரின் அதிகாரத்திற்குட்பட்ட முடிவு: அமைச்சர் ஜெயக்குமார் 

அமைச்சர் மணிகண்டனை பதவியிலிருந்து நீக்கியது முதல்வரின் அதிகாரத்திற்குட்பட்ட முடிவு என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :8 ஆகஸ்ட் 2019, 5:53 am

DIN

அமைச்சர் மணிகண்டனை பதவியிலிருந்து நீக்கியது முதல்வரின் அதிகாரத்திற்குட்பட்ட முடிவு என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். இதையடுத்து மணிகண்டனிடமிருந்த தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதலாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்கப்பட்டது.

அரசு கேபிள் தொலைக்காட்சியின் கட்டணம் அண்மையில் மாதத்துக்கு ரூ.130 என்ற அளவுக்குக் குறைக்கப்பட்டது. இதனை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் விமர்சித்து புதன்கிழமை பேட்டியளித்தார். இந்நிலையில், அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதற்கான காரணம் தனக்கு தெரியாது.

அமைச்சர் மணிகண்டனை பதவியிலிருந்து நீக்கியது முதல்வரின் அதிகாரத்திற்குட்பட்ட முடிவு என்றும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.