/

பாட்டில்களில் பெட்ரோல் விற்க வேண்டாம்: விற்பனையாளர் சங்கம் அறிவுறுத்தல்

தெலங்கானாவின் சாம்ஷாபாத் பகுதியைச் சோ்ந்த கால்நடை மருத்துவா் பிரியங்கா ரெட்டி (27), பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:24 pm

DIN

தெலங்கானாவின் சாம்ஷாபாத் பகுதியைச் சோ்ந்த கால்நடை மருத்துவா் பிரியங்கா ரெட்டி (27), மருத்துவமனையில் பணியை முடித்து விட்டு மாலை வீடு திரும்பியுள்ளாா். அதன் பின்னா் மீண்டும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பணியாற்ற இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். இந்நிலையில், அவரை காணவில்லை என்று அவரது குடும்பத்தினா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எரிந்த நிலையில் பெண் கால்நடை மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாா் என்று தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் விற்க வேண்டாம் என மாநில பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.