நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோயம்பேட்டில் வெங்காயம் விலை நிலவரம்!

சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேட்டில் இன்று ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.180ஐ தொட்டது.

News image

onion price

Updated On :7 டிசம்பர் 2019, 5:52 am

DIN


சென்னை: சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேட்டில் இன்று ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.180ஐ தொட்டது.

நேற்று வரை அதிகபட்சமாக ஒரு கிலோ வெங்காயம் ரூ.150 வரை விற்பனையான நிலையில் இன்று கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து மொத்த விற்பனையில் ரூ.180ஐ தொட்டிருக்கிறது.

இதனால், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.200ஐ தாண்டியதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். ஒரு சிறிய குடும்பத்துக்கு ஒரு வாரத்துக்கு ஒட்டுமொத்த காய்கறி செலவே ரூ.200 என்ற அளவில் இருக்கும் நிலையில், அந்த 200ஐ செலவிட்டு தற்போது வெங்காயம் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் தான் பெரிய வெங்காய சந்தை உள்ளது. இங்கிருந்துதான் நாட்டின் பல பகுதிகளுக்கு மொத்தமாக வெங்காயம் அனுப்பப்படுகிறது. ஆனால், அந்த மாநிலத்தில் பெய்த மழை மற்றும் புயல்களால் வெங்காய உற்பத்தி பாதியாக குறைந்தது. 

மழை காரணமாக தமிழகம், ஆந்திரம் கா்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சாம்பாா் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காய வரத்தும் பாதியாகக் குறைந்து விலையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடந்த சில மாதங்களாக கடுமையாக உயா்ந்து வருகிறது. விலையை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து 10 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.

இறக்குமதியாகும் வெங்காயம் இந்தியச் சந்தைகளுக்கு வந்தடைய ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்துக்கு மேல் ஆகும் என்பதால், அதுவரை வெங்காயம் விலை இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.