செங்கல்பட்டு அருகே பரனூரில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: 4 பேர் படுகாயம்
செங்கல்பட்டு அருகே பரனூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கேஸ் டேங்கர் லாரி, சரக்கு ஆட்டோ மீது கவிழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.


செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பரனூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கேஸ் டேங்கர் லாரி, சரக்கு ஆட்டோ மீது கவிழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்த இந்த சாலை விபத்தினால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பரனூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கேஸ் டேங்கர் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது கவிழ்ந்தது.
36 டன் எடை கொண்ட கேஸ் டேங்கர் லாரி, சரக்கு ஆட்டோ மீது கவிழ்ந்ததில், சரக்கு ஆட்டோவில் இருந்த 4 பேர் வாகனத்துக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
வாகன இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட 4 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...