சென்னை: வளர்ச்சிப் பாதையில் சீனாவுக்கு நெருக்கமாக இந்தியாவை அழைத்து வந்துள்ளோம் என்று இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழிசை பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2019 - 2020 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தேர்தல் காலம் என்பதால் வாக்குகளைக் குறிவைத்து பட்ஜெட்டில் நிறைய சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் வளர்ச்சிப் பாதையில் சீனாவுக்கு நெருக்கமாக இந்தியாவை அழைத்து வந்துள்ளோம் என்று இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழிசை பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
முதலில் நாட்டு மக்களின் வருமானத்தை உயர்த்திய பிறகு, இதுவரை வளர்ச்சிக்காக தியாகம் செய்த அவர்களுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில் இந்தியாவை 11-ஆவது இடத்தில இருந்து 4-ஆவது இடத்திற்கு பாஜக முன்னேற்றியுள்ளது.
வளர்ச்சிப் பாதையில் சீனாவுக்கு நெருக்கமாக இந்தியாவை அழைத்து வந்துள்ளோம்
இந்த பட்ஜெட்டின் மூலம் ஏழை எளிய மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுப்பு

தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்!

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட முதல் பாடல்!

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



