திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று ஈரோடு வருகை

பாஜக அகில இந்தியத் தலைவர்அமித் ஷா ஈரோட்டுக்கு வியாழக்கிழமை வருகிறார். சித்தோடு அருகே கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார்.

News image

கோப்புப்படம்

Updated On :14 பிப்ரவரி 2019, 1:46 am IST


பாஜக அகில இந்தியத் தலைவர்அமித் ஷா ஈரோட்டுக்கு வியாழக்கிழமை வருகிறார். சித்தோடு அருகே கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார்.
பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் நடைபெற்ற பிரமாண்டப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டுச் சென்றுள்ள நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஈரோட்டுக்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 14) வருகிறார். 
புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு வியாழக்கிழமை காலை கோவை விமானம் நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு மாவட்டம்,  சித்தோடு அருகே உள்ள டெக்ஸ்வேலியில் வந்து  இறங்குகிறார்.  அங்கு, காலை 11 மணிக்கு நெசவாளர்கள் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகிறார்.  இதையடுத்து பகல் 12  மணிக்கு சித்தோடு - பெருந்துறை சாலையில் உள்ள ஸ்ரீநகரில் வாக்குச்சாவடி நிர்வாகிகளைச் சந்திக்கிறார். தொடர்ந்து, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல்  மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.  
கூட்டத்தில்,  மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய அமைச்சர்  பொன். ராதாகிருஷ்ணன், அகில இந்திய  பொதுச் செயலாளர் முரளிதர்ராவ் , தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, முன்னாள் மாநில தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர்  கலந்து கொள்கின்றனர். இதையடுத்து கங்காபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பிற்பகல் 3 மணியளவில் கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் புதுதில்லி திரும்புகிறார் என கட்சியின் ஈரோடு மாவட்ட செய்தித் தொடர்பாளர் ஏ.பி. கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.