புதுதில்லி ஹோட்டல் விபத்தில் உயிரிழந்த திருச்சி பல் மருத்துவரின் சடலத்தை சென்னைக்கு கொண்டு சென்று, அங்கு இறுதிச்சடங்குகளை நடத்த அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.
திருச்சி ராமலிங்கநகரைச் சேர்ந்தவர் பல் மருத்துவர் சங்கரநாராயணன் (55). திருச்சி,சென்னையிலுள்ள தனியார் மருத்துவ மனையில் பணியாற்றி வந்தார். மேலும், திருச்சியில் தனியாக மருத்துவமனையும் நடத்தி வந்தார்.
மருத்துவக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக புதுதில்லி சென்றிருந்த இவர்,கரோல்பாக்கிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். இந்த ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவர் சங்கரநாராயணன் உயிரிழந்தார்.
இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். மகள் சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவப்படிப்பு பயின்று வருகிறார். மகன் அமெரிக்காவில் உள்ளார். மருத்துவரின் உறவினர்கள், குடும்பத்தினர் பெரும் பகுதியினர் சென்னையில் உள்ளதாலும், சென்னை வேளச்சேரி விஜயா நகரில் மருத்துவரின் வீடு உள்ளதாலும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு விமானம் மூலம் கொண்டு வரப்படும் சங்கரநாராயணனின் உடலை, சென்னைக்கு கொண்டு சென்று வெள்ளிக்கிழமை இறுதிச்சடங்குகள் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள் விற்பனை: ஒருவா் கைது
பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டவா் கைது

மக்களுக்கு உழைக்கவே தவெகவில் இணைந்தேன்!பெருந்துறை முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஜெயகுமாா்

உலக சாம்பினை வீழ்த்தி சாத்விக் -சிராக் அசத்தல்: இறுதிக்கு தகுதி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



