காங்கிரசுக்கு எத்தனை சீட்டு? இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்: திருநாவுக்கரசர் 

இன்னும் சற்று நேரத்தில் திமுக கூட்டணியில்  காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் என்பது      தெரிந்து விடும் என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
காங்கிரசுக்கு எத்தனை சீட்டு? இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்: திருநாவுக்கரசர் 

கிண்டி: இன்னும் சற்று நேரத்தில் திமுக கூட்டணியில்  காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் என்பது      தெரிந்து விடும் என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  இடம்பெற உள்ளது. முன்னதாக செவ்வாயன்று அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக மற்றும் பாஜக கட்சிகளுக்கான இடங்கள் குறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.      

அதேசமயம் செவ்வாயன்று தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அதேபோல் ராகுலுடன் திமுக மாநிலங்களவை எம்.பியான கனிமொழி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் திமுக கூட்டணியில்  காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் என்பது தெரிந்து விடும் என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் புதன் மாலை செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் கூறியதாவது:

திமுக கூட்டணியில்  காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் அமைப்புச் செயலாளரான வேணுகோபால் எம்.பி மற்றும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும், காங்கிரஸ் தேசிய செயலரான முகுல் வாஸ்னிக் ஆகியோர் சென்னை வந்திருந்தர்.

அவர்களுடன் நானும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டோம். ஆலோசனை முடிந்து காங்கிரஸ் தலைவர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் செல்ல உள்ளனர்.

எனவே இன்னும் சற்று நேரத்தில் திமுக கூட்டணியில்  காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து மேலிடப் பிரதிநிதிகள் மூலம் தெரிய வரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com