ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

ஸ்ரீமத் அல்லூரி வெங்கடாத்ரி ஸ்வாமிகளின் 142 ஆவது தீர்த்த மஹோத்ஸவம்!

ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீரங்க நாராயண ஜீயரிடத்தில் த்ரீதண்ட காஷாயம் பெற்றவரான ஸ்ரீ திருவேங்கட ராமானுஜ ஜீயர் என்னும் ஸ்ரீமத் அல்லூரி

Published On :

ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீரங்க நாராயண ஜீயரிடத்தில் த்ரீதண்ட காஷாயம் பெற்றவரான ஸ்ரீ திருவேங்கட ராமானுஜ ஜீயர் என்னும் ஸ்ரீமத் அல்லூரி வெங்கடாத்ரி ஸ்வாமிகளின் 142-ஆவது தீர்த்த மஹோத்ஸவம் 25.02.2019 அன்று அவருடைய திருவரசு அமைந்துள்ள திருச்சி, ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையில் கொண்டாடப்படுகிறது.

அன்று வெங்கடாத்ரி ஸ்வாமிகளால் ஸ்ரீ ரங்கநாதருக்கு சாற்றப்பட்ட பாண்டியன் கொண்டை, மகர கண்டிகை, சாயக் கொண்டை, கல்லிழைத்த ராஜமுடிகள் முதலான ரத்னா கிரீட திருவாபரணங்கள் அரங்கனுக்கு இவருடைய தீர்த்த மஹோத்ஸவ நாளில் மட்டும் சாற்றப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது சிறப்பு. 

தவிர, அவருடைய திருவரசில் தீர்த்த மஹோத்ஸவத்தன்று ஸ்ரீரங்கம் கோயில் சார்பாக யானை மீது காவிரி ஆற்று நீர் கொண்டுவரப்பட்டு அபிஷேகம் நடைபெறும். அச்சமயம் ஸ்ரீமத் அல்லூரி வெங்கடாத்ரி ஸ்வாமிகள் இயற்றியுள்ள கீர்த்தனைகளில் நவரத்ன கீர்த்தனைகளை அவருடைய பரம்பரையில் வந்த சம்பிரதாய பஜனை சிஷ்ட கோஷ்டியினர் இசைப்பார்கள். 

நாமும் செல்வோம், வைபவத்து காணுவோம், அரங்கன் அருள் பெறுவோம், ஆச்சாரியன் கடாக்ஷத்திற்கு பாத்திரமாகுவோம்.

ரங்கா! ரங்கா!! ரங்கா!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.