அதேபோல், ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை. 13 பேரை சுட்டுக்கொன்ற கொடுமை. இது எதார்த்தமாக நடந்த சம்பவம் அல்ல. மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்துகொண்டு செய்திட்ட சம்பவம். தனியார் கம்பெனியிடம் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்தக் காரியத்தை அவர்கள் செய்தார்கள். இப்போது என்ன நிலை, அண்மையில் உச்சநீதிமன்றம் அந்த ஆலையை திறக்கக்கூடாது என உத்தரவு வந்துவிட்டது. ஆனால், எந்த நிலையிலும் திறக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான், நான் சட்டமன்றத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி இதனை கொள்கை முடிவாக எடுக்க வேண்டுமென வலியுறுத்தினேன். அதன் பின்னர், சட்டமன்றத்திற்கு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இதை நான் மட்டுமல்ல, எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் இன்றைக்கு நிறைவேற்றாத கொடுமை. ஆகவே, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டு மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்பதை நீங்கள் மனதில் பதிய வைத்து பணியாற்றுங்கள்.