நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை... அச்சத்தில் வாகன ஓட்டிகள்..!

பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்தது வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் மட்டுமின்றி சாமானிய மக்கள் மத்தியிலும் மீண்டும் கலக்கத்தை

News image
Updated On :25 பிப்ரவரி 2019, 7:59 am IST


பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்தது வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் மட்டுமின்றி சாமானிய மக்கள் மத்தியிலும் மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் எரிபொருள் தேவை பெருமளவில் இறக்குமதி மூலமே நிறைவு செய்யப்படுகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் அதிகமாக இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. 

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தாற்போல் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் எரிபொருள் விலையை தினந்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த சில மாதங்களுக்கு முன் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் அதன் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.87-க்கும் மேல் அதிகரித்தது. டீசலும் ரூ.80-ஐ எட்டியது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டன. இதையடுத்து, பல்வேறு தரப்பினர் சொந்த வாகனப் பயன்பாட்டைத் தவிர்க்கத் தொடங்கினர். அதன் தாக்கம் விற்பனையில் எதிரொலித்தது.

இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான வரியை ரூ.2.50 வரை குறைத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து குறைந்தது. கடந்த இரண்டரை மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.14.54-ம், டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ. 13.53-ம் குறைந்தது. 

இறங்கு முகத்தில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை, சில நாட்களில் சிறதளவில் மாற்றங்களை கண்டு வந்தது. இப்போது, மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை விலையில் இருந்து எவ்வித மாற்றமுமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 74.08 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ. 70.32 ஆகவும் விற்பனையானது.  

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 16 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.74.32 ஆகவும், டீசல் விலை 17 காசுகள் அதிகரித்து ரூ.70.59 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இறங்கு முகத்தில் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்வது வாகன ஓட்டிகள் மற்றும் சாமானிய மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.