இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

பழ. நெடுமாறனுக்கு காமராஜர் விருது; சி.பொன்னையனுக்கு பெரியார் விருது: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் 2018-ஆம் ஆண்டுக்கான காமராஜர் விருது தமிழர் தேசிய முன்னணிகஈ தலைவர் பழ.நெடுமாறனுக்கும், பெரியார் விருது முன்னாள் அமைச்சர் சி.பொன்னையனுக்கும்

News image
Updated On :15 ஜனவரி 2019, 1:42 am IST


தமிழக அரசின் 2018-ஆம் ஆண்டுக்கான காமராஜர் விருது தமிழர் தேசிய முன்னணிகஈ தலைவர் பழ.நெடுமாறனுக்கும், பெரியார் விருது முன்னாள் அமைச்சர் சி.பொன்னையனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஒவ்வோர் ஆண்டும் திருவள்ளுவர் திருநாளையொட்டித் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உணர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆண்டுக்கான விருதுகளை அறிவித்துள்ளார்.
திருவள்ளுவர் விருது (2019) எம்.ஜி. அன்வர் பாட்சாவுக்கும், பெரியார் விருது (2018) முன்னாள் அமைச்சர் சி.பொன்னையனுக்கும், அம்பேத்கர் விருது (2018) மருத்துவர் சி.இராமகுருவுக்கும், அண்ணா விருது (2018) பேராசிரியர் மு.அய்க்கண்ணுக்கும், காமராஜர் விருது (2018), தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறனுக்கும், பாரதியார் விருது (2018) பாவரசு மா.பாரதி சுகுமாரனுக்கும், பாரதிதாசன் விருது (2018) கவிஞர் தியாரூவுக்கும், திரு.வி.க.விருது (2018) முனைவர் கு.கணேசனுக்கும், கி.ஆ.பெ.விசுவநாதம் விருது (2018) சூலூர் கலைப்பித்தனுக்கும் வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளை ஜனவரி 21-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் நாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.
விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருத்துக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படும்.
இந்த விழாவில் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 92 பேருக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் மாதம்தோறும் உதவித்தொகை ரூ.2.500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 பெறுவதற்கான அரசாணையையும் முதல்வர் அளிக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.