தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நூற்றுக்கணக்கான பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நான்கு நாள் சுற்றுப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை சேலம் வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், சேலம் மாநகரம் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர், அங்கு கூடியிருந்த சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பகல் 1 மணி வரை
பெற்றார்.
அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் செ.செம்மலை, ஜி.வெங்கடாஜலம், ஏ.பி.சக்திவேல், வி.சி.ஆறுக்குட்டி, எம்.பி.க்கள் வி.பன்னீர்செல்வம், பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் முதல்வரை சந்தித்து பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். மதியம் வீட்டில் ஓய்வு எடுத்த முதல்வர், மாலையில் பொதுமக்களிடம் இருந்து குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஜன. 15) முதல்வர் தனது சொந்த ஊரான சிலுவம்பாளையம் கிராமத்துக்குச் செல்கிறார். பொங்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலை வீடு திரும்புகிறார்.
இதையடுத்து, சேலம் மாநகரில் அண்ணா பூங்காவில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வெண்கல உருவச் சிலைகள் கொண்ட மணிமண்டபத்தை புதன்கிழமை காலை 9.30 மணிக்கு முதல்வர் திறந்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இதையடுத்து, காலை 11 மணியளவில் மகுடஞ்சாவடி மற்றும் அரியானூர் மேம்பாலப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடக்கி வைத்தும், மக்கள் நலத் திட்டங்களை வழங்கியும் பேசுகிறார். அதைத் தொடர்ந்து, வீட்டுக்கு வந்து மதியம் ஓய்வெடுக்கும் முதல்வர், பின்னர் கார் மூலம் கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








