கோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் பலி
கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி சகோதரர்களான தொழிலாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி சகோதரர்களான தொழிலாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் உள்ள தனியார் குடியிருப்பு ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் இருவர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எந்தஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் சுத்தம் செய்யும் பணியை செய்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த முருகவேல், மற்றும் பாண்டித்துரை என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...