அண்மையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிற வேளையில், பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கும் நாடு முழுமைக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த ஆலோசித்து வரும் மத்திய அரசின் முயற்சியானது நாட்டைச் சீர்குலைக்கும் பேரழிவுச் செயலாகும். இது இந்தியாவின் அரசியலமைப்புச் சாசனத்திற்கே எதிரானது. அடுத்தப் பாராளுமன்றத் தேர்தலுக்குள் 30 சட்டமன்ற, யூனியன் பிரதேசங்களுக்கு நாடு முழுதும் தேர்தல் நடக்கவிருக்கிறது. இவையாவற்றின் கால வரம்பையும் மாற்றியமைத்து, ஒருங்கிணைப்பது அசாத்தியமானது மட்டுமன்று அவசியமற்றதும்கூட!