ரெட்டியார்பட்டி: நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் திமுகவைச் சேர்ந்த நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் நெல்லை மாநகர் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. அப்போது சிறப்பாகச் செயல்பட்டதாக கருணாநிதியால் புகழப்பட்டவர்.
இந்நிலையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் செவ்வாயன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள அவரது வீட்டில் செவ்வாய் மாலை புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வீட்டுப் பணிப்பெண் உட்பட மூவரை கொடூரமாக வெட்டிக் கொலைசெய்து விட்டு தப்பித்து விட்டனர்.
தற்போது மரணமடைந்தோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கொலைக்கு காரணம் அரசியல் பகையா அல்லது சொத்து தகராறா என்ற கோணத்தில் போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









