தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஒரே நாளில் வேலூருக்கு படையெடுக்கும் இரு முக்கிய தலைவர்கள் 

வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ள வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்காக முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே நாளில் பிரசாரத்தை துவக்குகின்றனர்.

News image
Updated On :25 ஜூலை 2019, 11:28 am

DIN

சென்னை: வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ள வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்காக முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே நாளில் பிரசாரத்தை துவக்குகின்றனர்

ணப்பட்டுவாடா புகார் தொடர்பாக ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறவிருந்த வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்ல் நடைபெறவுள்ளது. 

இதில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்‌, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் மற்றும் வேட்பு மனு பரிசீலனை நிறைவடைந்ததையடுத்து, வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்காக முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே நாளில் வேலூரில்  பிரசாரத்தை துவக்குகின்றனர்.

இதற்காக அதிமுக தலைமைக்கழகம் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்வர் பழனிசாமி வரும் 27, 28 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் வேலூரில்  பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான சற்று நேரத்திலேயே திமுக தலைவர் ஸ்டாலினும் வரும் 27-ஆம் தேதியே, வேலூரில் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.