தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முத்தலாக் விவகாரத்தில் அதிமுகவின் 'யூ டர்ன்' தவறு: தமிழிசை சாடல்  

முத்தலாக் விவகாரத்தில் அதிமுகவின் 'யூ டர்ன்' தவறு என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

News image
Updated On :30 ஜூலை 2019, 11:56 am

DIN


சென்னை: முத்தலாக் விவகாரத்தில் அதிமுகவின் 'யூ டர்ன்' தவறு என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரான தேனி ஓ.பி.ரவீந்திரநாத், முத்தலாக் சட்டத்தை ஆதரித்து பேசி வாக்களித்தார். இது இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை அதிமுக மீது ஏற்படுத்தி இருந்தது. அதேசமயம் செவ்வாயன்று மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதிமுக உறுப்பினர்கள்  'இந்த மசோதாவின் ஒரு சில பிரிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இது சமூகத்தில் உண்டாக்க கூடிய விளைவுகளையும் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற சிறப்புக்குழுவுக்கு இதனை அனுப்ப வேண்டும' என்று வலியுறுத்தி விட்டு, வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் முத்தலாக் விவகாரத்தில் அதிமுகவின் 'யூ டர்ன்' தவறு என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

முத்தலாக் விவகாரத்தில் அதிமுகவின் 'யூ டர்ன்' தவறு. வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அ.தி.மு.க. இந்த முடிவை எடுத்துள்ளது. முத்தலாக்கினால் பெண்கள் உரிமை பாதிக்கப்படுகிறது என்பது தெரிந்தும் அவர்கள் இதனை எதிர்க்கின்றனர். ஓட்டுக்காக மட்டுமே முத்தலாக் மசோதாவுக்கு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.