திருச்சி அருகே ஜல்லிக்கட்டில் மாடு முட்டிஇளைஞர் பலி
திருச்சி அருகே வெள்ளியன்று நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இளைஞர் ஒருவர் பலியானார்.


திருச்சி: திருச்சி அருகே வெள்ளியன்று நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டிஇளைஞர் ஒருவர் பலியானார்.
திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் வெள்ளியன்று ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்றது. இதில் வாடிவாசலில் இருந்து சுமார் 400 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகளை அடக்க இளைஞர்களும் களத்தில் குதித்தனர். இதில் அருகேயுள்ள அனந்திமேடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (23) என்ற இளைஞர் நெஞ்சில் மாடு முட்டியதில் படுகாயமடைந்தார்.
அவர் உடனடியாக லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
ஜல்லிக்கட்டில் மேலும் 8 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...