நாடாளுமன்றத் தேர்தல்: தமிழகத்தில் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


புது தில்லி: விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது.
தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கியது போக அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் கடந்த ஞாயிறு அன்று வெளியானது.
அதேபோல தேமுதிக மற்றும் பாமக கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தில்லியில் மத்திய சுககாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா வியாழனன்று இந்த பட்டியலை வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:
தூத்துக்குடி - தமிழிசை சவுந்திரராஜன்
ராமநாதபுரம் நயினார் நாகேந்திரன்
கோவை - சி.பி.ராதாகிருஷ்ணன்
சிவகங்கை - ஹெச்.ராஜா
கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்னன்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...