மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸூக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் முதலில் அறிவிக்கப்பட்டனர். சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படாமல் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் பேசியதாவது:
நான் இரண்டாவது முறையாக சிவகங்கையில் களமிறங்குகிறேன். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம் காரணமாக நான் வெற்றி பெறுவது நிச்சயம் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் சிவகங்கை தொகுதியை ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி ஒதுக்கி வருகிறது. அங்கிருந்து காங்கிரஸ் சார்பில் 6 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 2 முறையும் ப.சிதம்பரம் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


