மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு 932 வேட்பு மனுக்கள் ஏற்பு: சத்யபிரதா சாஹூ

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 952 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 மார்ச் 2019, 7:42 am

DIN

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 932 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹூ கூறியதாவது, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு நடந்த வாகன சோதனையில் ரூ. 50.70 கோடி பணம், 223 கிலோ தங்கம், 356 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் 305 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 213 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இடைத் தேர்தலைப் பொறுத்தவரை பெரம்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 51 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்ட 1587 வேட்பு மனுக்களில் 655 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 932 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக கரூர் மக்களவைத் தொகுதியில் 43 பேரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தென் சென்னையில் 42 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் 10 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.