எனது தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி, அதிகாரம், பணபலத்தால் தோற்கடிக்கப்பட்டேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
எனது தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி, அதிகாரம், பணபலத்தால் தோற்கடிக்கப்பட்டேன். வாக்களித்த தேனி தொகுதி மக்களுக்கும், உழைத்த கூட்டணிக் கட்சியினருக்கும் நன்றி. தேனி தொகுதியில் தேர்தலின்போது நடைபெற்ற முறைகேடுகள் குறித்த ஆவணங்கள் கிடைத்துள்ளன.
வழக்கறிஞர்களுடன் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும். பல மின்னணு இயந்திரங்களில் சீல் இல்லை. கேட்டால் அரக்கு கீழே விழுந்துவிட்டதாக கூறினர். தேனி மாவட்டத்தில் விவிபேட் வாக்குகளை முழுமையாக எண்ண வேண்டும். வட மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாததே காங்கிரசின் தோல்விக்கு காரணம்.
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தது. அதுபோல் வடமாநிலங்களில் அமையவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்ற தமிழக பாஜகவினர் மீது மோடிக்கு இல்லாத காதல் ஓபிஎஸ் மீது மட்டும் ஏன்?. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராம் இன் லீலா அப்டேட்!

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

கூட்டணியே தேவை இல்லை என்பதை விரைவில் பரிசீலிப்போம்: மு.க. ஸ்டாலின்

குடை எடுத்துச் செல்லுங்கள்.. அடுத்த 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP



