சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் தந்தை, மகன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (26). இவர், சேலம் அருகே நாட்டாமங்கலம் பகுதியில் மாட்டு இறைச்சிக் கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் ரமேஷ், தனது உறவினர் பாலுவுடன் (35) கஞ்சநாயக்கன்பட்டியிலிருந்து மாடு ஒன்றை வாங்கிக் கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த சாதிக் பாஷா (46) என்பவரின் மினி வேனில் மாட்டை ஏற்றிக் கொண்டு நாட்டாமங்கலத்தில் உள்ள இறைச்சி கடைக்குச் சென்று கொண்டிருந்தார்.
மினி வேனை சாதிக் பாஷா ஓட்டினார். அவருக்கு உதவியாளராக அவரது மகன் ரகமத் பாஷா(17) உடன் சென்றார்.
சனிக்கிழமை நள்ளிரவு 12.45 மணி அளவில் மினி வேன் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டி மேம்பாலத்தில் சென்றபோது, முன்னால் சரக்கு லாரியும், அதற்கு பின்னால் தண்ணீர் லாரியும் சென்று கொண்டிருந்தன.
மினி வேனுக்கு பின்னால் மற்றொரு சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது.
முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்து நிற்க முயன்ற காரணத்தால், பின்புறமாக வந்து கொண்டிருந்த 3 வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதின.
இதில் நடுவில் சிக்கிக் கொண்ட மினி வேன் பலத்த சேதமடைந்தது. வேனில் இருந்த ரமேஷ், பாலு, சாதிக்பாஷா, ரகமத் பாஷா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த சூரமங்கலம் போலீஸார் விரைந்து சென்று சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியால் 4 வாகனங்களையும் அகற்றி போக்குவரத்தைச் சரிசெய்தனர். இந்த விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக கூட்டணிக்கு 20 திரிணமூல் எம்.பி.க்கள் ஆதரவு: மக்களவைத் தலைவருக்கு கடிதம்

இறைச்சிக்காக வளா்க்கப்படும் கால்நடைகளுக்கு அளிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட மருந்துகள்: அறிக்கை கோருகிறது மத்திய அமைப்பு

நீா்வாழ் உயிரினங்கள், முட்டை, தேன் ஏற்றுமதி: இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்
ராணிப்பேட்டையில் ரூ.217 கோடியில் தோல் தொழில்முனையம்: மத்திய அரசு அறிவிப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



