சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பள்ளிகளுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை மால்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.

Updated On :27 மே 2019, 4:50 am IST

பள்ளிகளுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை மால்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த ஆண்டில் வழக்கத்தை விட முன்னதாகவே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த மாத கடைசி வாரம் முதலே மாமல்லப்புரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.  அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து நாளுக்கு நாள் வெயிலின் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாள்களாக கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்தை சுற்றிப் பார்த்தனர்.
குறிப்பாக கோடை விடுமுறைக் காலத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் கூடுதல் எண்ணிக்கையில் வந்தனர். கோடை விடுமுறையின் கடைசி வார விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை அவர்களின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் சிறு வியாபாரிகளுக்கு அதிக அளவில் வர்த்தகம் நடைபெற்றது.
சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள ஐந்த ரதம், அர்ஜுனன் தபசு, கோவர்த்தன மண்டபம், வராக மண்டபம், ஆமை மண்டபம், வெண்ணை உருண்டைப்பாறை, பழங்கால கலங்கரை விளக்கம் மற்றும் நவீன கலங்கரை விளக்கம், கடற்கரைக் கோயில் ஆகியவற்றை சுற்றிப் பார்த்தனர். வெயிலில் சோர்ந்து போன சுற்றுலாப் பயணிகள் வெப்பத்தைத் தணிக்க கடலில் குளித்து மகிழ்ந்தனர். கடற்கரையில் இருந்த காவலர்களும், கடலோரக் காவல்படையினரும் கடலில் குளித்தவர்களுக்கு கடலின் ஆழம் குறித்து விளக்கினர். 
கடலில் வெகுதூரம் செல்ல வேண்டாம் என எச்சரித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.