சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க போராட்டங்கள் வேண்டாம்; பிக் பாஸ் போதும்: சீறிய சீமான் 

தமிழ்நாட்டில் தேர்தலில் ஓட்டுக்களைப் பெற போராட்டங்கள் நடத்தத் தேவையில்லை; பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றே போதும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 மே 2019, 11:41 am

DIN

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தலில் ஓட்டுக்களைப் பெற போராட்டங்கள் நடத்தத் தேவையில்லை; பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றே போதும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடளுமன்றத் தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியானது குறிப்பிடத்தகுந்த வாக்குகளைப் பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும்  இடையிலான வாக்கு வித்தியாசம் நூலிழையில்தான் இருந்தது. 

குறிப்பாக 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து தேர்தல் களத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நெருக்கடி  என்று    கொடுத்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தேர்தலில் ஓட்டுக்களைப் பெற போராட்டங்கள் நடத்தத் தேவையில்லை; பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றே போதும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் புதனன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டு மக்கள் இன்னும் திரை மோகத்திலிருந்து மீளவில்லை. தமிழ்நாட்டில் தேர்தலில் ஓட்டுக்களைப் பெற போராட்டங்கள் நடத்தத் தேவையில்லை; பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றே போதும் என்பதைத்தான், நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

ராமர் கோயிலைக் கட்டி விட்டால், பாஜகவால் தொடர்ந்து அரசியல் செய்ய முடியாது. அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில், பாஜக அரசு முடிந்தால் ராமர் கோவிலை,  கட்டிக் காட்டட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.