ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய பாம்பன் ரயில் பாலம்! முழு வீச்சில் கட்டுமானப் பணிகள்

ராமேஸ்வரத்தின் பாம்பன் பகுதியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் முழு வீச்சில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன. 
ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய பாம்பன் ரயில் பாலம்! முழு வீச்சில் கட்டுமானப் பணிகள்

ராமேஸ்வரத்தின் பாம்பன் பகுதியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் முழு வீச்சில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக புதிய பாலத்தின் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள விஸ்வநாதன் என்ற அதிகாரி ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில்..

105 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலம் அதன் ஸ்திரத்தன்மையை இழந்து வருகிறது. எனவே, ரூ.250 கோடி மதிப்பீட்டில் இங்கு புதிய ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.

இதையடுத்து பூமி பூஜை வெள்ளிக்கிழமை போடப்பட்டு சனிக்கிழமை முதல் புதிய பாலத்தின் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இனிவரும் காலங்களில் புதிய பாலத்தின் வழியாக ரயில்களை அதிவிரைவாக, அதிக எடையை தாங்கக் கூடியதால் பாம்பன் - ராமேஸ்வரம் இடையே அதிக ரயில் போக்குவரத்துடன் இயக்க முடியும் என்று தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் ரயில் பாலம் தான் நாட்டின் முதல் கடல் பாலம் மற்றும் 2-ஆவது நீளமான கடல் பாலம் ஆகும். இதன் நீளம் சுமார் 2.3 கி.மீ. (6,776 அடி அல்லது 2,065 மீ) ஆகும். கப்பல்கள் செல்ல வசதியாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 1913-ஆம் ஆண்டு இப்பாலத்தின் கட்டுமானப் பணி தொடங்கி 18 மாதங்களில் முடித்து, 1914-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. இதிலுள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடியாகும். ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com