டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசு திட்டம்: எப்போது தொடங்குகிறது?

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசு திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கிறார்.

News image
பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம்
Updated On :27 நவம்பர் 2019, 9:29 am

DIN


சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசு திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கிறார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை நாளை மறுநாள் நவம்பர் 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடக்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடையில் அரிசி பெறும் அட்டைதாரா்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தலா ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று கள்ளக்குறிச்சியில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

கள்ளக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் புதிய மாவட்டத்தைத் தொடக்கி வைத்தும், ரூ. 243 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.

தமிழகம் வறட்சியாக இருந்த நிலையில், கடந்த தைப் பொங்கல் பண்டிகையின்போது, ரூ.1,000 தொகையுடன் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. தற்போது, மழை பெய்து வளமாக இருந்தாலும், வருகிற பொங்கல் பண்டிகையையும் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக, அரிசி அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சையுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றாா் முதல்வா்.

இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இந்த திட்டம் நவம்பர் மாத இறுதியிலேயே தொடக்கி வைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.