புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தமிழகத்தில் 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

News image

பொதுத் தேர்வு அட்டவணை

Updated On :28 நவம்பர் 2019, 10:07 am

DIN


சென்னை: தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த மட்டுமே இந்த பொதுத்தேர்வு நடத்தப்படுவதாகவும், இது குறித்து மாணவர்களோ, பெற்றோர்களோ அச்சம் அடைய தேவையில்லை என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

8ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 30ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ம் தேதி முடிவடைகிறது. மாணவர்கள் வினாத்தாள் படிப்பதற்கு 10 நிமிடம், விவரங்களை பதிவு செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், காலை 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி, 12.15 மணி வரை நடைபெற உள்ளது.

இரு பொதுத்தேர்வுகளும் காலை 10.00 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.15 மணிக்கு முடிவடையும். 

Story image

8ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை

Story image

5ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி நிறைவு பெறுகிறது.

Story image
Story image

அதில், மாணவர்கள் வினாத்தாள் படிப்பதற்கு 10 நிமிடம், விவரங்களை பதிவு செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், காலை 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி, 12.15 மணி வரை நடைபெற உள்ளது.

ஐந்தாம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.