தென் தமிழகத்தில் கனமழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நவம்பா் 29, 30, டிசம்பா் 1, 2 ஆகிய 4 நாள்கள் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்தமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருச்சி, அரியலூர், தஞ்சை, நாகை, சிதம்பரம், திருவிடைமருதூர், கும்பகோணம், புதுக்கோட்டை, திருவாரூர், நன்னிலம், சன்னாநல்லூர், பேரளம், குடவாசல், கொரடாச்சேரி உள்பட பல பகுதிகளில் வியாழக்கிழமை இரவு தொடங்கி தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...