பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தமிழகத்தில் இருந்து கடத்தபட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து நாளை மறுநாள் சென்னை வருகை 

தமிழகத்தில் இருந்து கடத்தபட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்து நாளை மறுநாள் சென்னை வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

News image
சிலைக்கடத்தல் சிறப்பு தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்
Updated On :11 செப்டம்பர் 2019, 2:55 pm

DIN

சென்னை: தமிழகத்தில் இருந்து கடத்தபட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்து நாளை மறுநாள் சென்னை வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

தமிழகம் முழுவதும் உள்ள சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் சிறப்பு தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்குகளை விசாரித்து வந்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ந்தேதி  ஓய்வுபெற இருந்த நிலையில், அவரை மேலும் ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து உயர் நீதிமன்றம் பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது. 

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கடத்தபட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருந்து நாளை மறுநாள் சென்னை வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலையானது ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  அந்த சிலை தமிழகத்தைச் சேர்ந்தது என்பதை சிறப்பு பிரிவு அதிகாரிகள் தெளிவாக நிரூபித்த பின்னர், சிலையை ஒப்படைக்க அருங்காட்சியக நிர்வாகம் சம்மதித்தது.   

அதன்படி அங்கிருந்து மீட்கப்பட்டு தில்லி கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை வெள்ளியன்று சென்னை கொண்டு வரப்படுகிறது என ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.