சென்னை: பதாகைகள் இல்லாத விழாக்கள்தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் ஆகும். பதாகைகள் தவிர்ப்போம்... நாகரிகம் காப்போம். பதாகைகள் அமைத்தவர்களுக்கு அபராதம் விதித்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமே இப்படி கூறும் உரிமை உண்டு!
பா.ம.க. நிகழ்ச்சிகளில் பதாகைகள் - கட் அவுட்களுக்கு இடம் கிடையாது. தூத்துக்குடியில் பா.ம.க. நிகழ்ச்சிக்காக என்னை வரவேற்று வைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பதாகைகளை அகற்றிய பிறகு தான் விழாவில் பங்கேற்றேன். புதுவையில் எனது நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பதாகைகளை அகற்றியதுடன், வைத்தவர்களுக்கு அபராதமும் விதித்தேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு பதாகைகள், கட்-அவுட்களை வைக்கக் கூடாது என்ற எனது ஆணை இன்றும், என்றும் பா.ம.க. நிர்வாகிகளால் கடைபிடிக்கப்பட வேண்டும். இந்த விதியை மீறுவது குறித்து பா.ம.கவினர் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் அண்டை வீட்டாா் மோதலில் கடைக்காரா் கொலை: இருவா் காயம்

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


