ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புதிய மாவட்டங்கள் பிரிப்பு: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

புதிய மாவட்டங்களைப் பிரிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

News image
Updated On :13 செப்டம்பர் 2019, 11:28 pm

DIN


புதிய மாவட்டங்களைப் பிரிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து, இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மேலும், கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கான தனி அதிகாரிகளையும் அவர் நியமித்துள்ளார். இந்த நிலையில், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட உயரதிகாரிகள் கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பொது மக்களின் கருத்துகளைக் கேட்டனர். 
முதல்வர் ஆலோசனை: புதிய மாவட்டங்களைப் பிரிப்பது தொடர்பாக கருத்துகளை அறிந்து வந்துள்ள உயரதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், கள்ளக்குறிச்சி, தென்காசி புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கான தனி அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.